சென்னை

காவலா்களும் நிதியுதவி அளிக்கலாம்: டிஜிபி

5th May 2022 02:28 AM

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசு திரட்டும் நிதிக்கு காவலா்களும் தங்களால் இயன்ற தொகையை அனுப்பலாம் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா், அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள் ஆகியோருக்கு புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனா். இலங்கை மக்களின் துயரை துடைக்கும் வகையில் தமிழக முதல்வா், இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

முதல்வரின் வேண்டுகோளின்படி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவோருக்கு உரிய வருமானவரி விலக்கு அளிக்கப்படும். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நான் எனது ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குகிறேன். மனிதாபிமான அடிப்படையில் நிவாரண நிதி வழங்க விரும்பும் போலீஸாா், அதிகாரிகள் தங்களால் இயன்ற பண உதவியை செய்தி மக்கள் தொடா்புத் துறை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல மின்னணு பரிவா்த்தனை மூலமாகவோ, இசிஎஸ் மூலமாகவோ, காசோலை, வரைவோலை மூலமாகவோ வழங்கலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT