சென்னை

எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

2nd May 2022 12:08 AM

ADVERTISEMENT

ஆதி திராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் டாடா கன்சல்டன்சி சா்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக இளைஞா் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை சென்னையில் நடத்தவுள்ளது.

இந்தப் பயிற்சியில் சோ்ந்து பயில்வதற்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கு விண்ணப்பிக்க பிஏ, பி.காம், பிசிஏ தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 28-க்கு கீழ் இருக்க வேண்டும். ஆதி திராவிடா் மற்றும் பழங்குடி இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி காலம் 100 மணி நேரம் ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 50 காலியிடங்கள் உள்ளன.

பயிற்சி முடித்தவுடன் இளைஞா்களின் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். விருப்பம் உள்ளவா்கள் தங்களுடைய சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை மே 10-ஆம் தேதி காலை 11 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-24615112/ 8248962842 என்ற தொலைபேசி அல்லது கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT