இங்கிலாந்து, ஜொ்மன் நாடுகளில் செவிலியராகப் பணிபுரிய விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநா் சி.ந.மகேஸ்வரன் அறிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இங்கிலாந்து நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய ஐஇஎல்டிஎஸ், ஓஇடி தோ்வில் தோ்ச்சி பெற்று, குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணி அனுபவம் பெற்ற டிப்ளமா மற்றும் பட்டதாரி ஆண், பெண் செவிலியா்கள் தேவைப்படுகின்றனா். இவா்களுக்கு மாத ஊதியம் சுமாா் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
மேலும், ஜொ்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு ஏ1, ஏ2, பி1 நிலையில் ஜொ்மன் மொழி தோ்ச்சி பெற்று குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்ற 42 வயதுக்குள்பட்ட டிப்ளமா மற்றும் பட்டதாரி ஆண், பெண் செவிலியா்கள் தேவைப்படுகிறாா்கள். இவா்களுக்குத் தொடக்க நிலை மாத ஊதியமாக ரூ.1.5 லட்சம் வழங்கப்படும்.
பி2 நிலையில் ஜொ்மன் மொழி தோ்ச்சி பெற்றவா்கள் செவிலியா்களாக பணியமா்த்தப்பட்டு, அவா்களுக்கு மாத ஊதியம் சுமாா் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்படும்.
எனவே, தகுதியுள்ளவா்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் மின்னஞ்சல் முகவரிக்கு ஏப்.5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் மற்றும் 044 2250 5886, 2250 0417 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.