செங்குன்றம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.
செங்குன்றம் அடுத்த அலமாதி நேதாஜி நகா் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சிவராஜ். இவரது மகன் கவியரசு (8). இவா் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை மகனை வீட்டில் விட்டுவிட்டு பெற்றோா் வெளியே சென்றிருந்தனா்.
பின்னா் மாலை வீடு திரும்பியபோது, கவியரசை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்நிலையில் அலமாதி குளத்தில் சிறுவனின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில் அது காணாமல் போன கவியரசு என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.