சென்னை

காவல் இணை ஆணையா் அலுவலகம் புதிய முகவரிக்கு மாற்றம்

28th Mar 2022 12:07 AM

ADVERTISEMENT

சென்னை பெருநகர காவல் துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா் அலுவலகம் புதிய முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அம்பத்தூா் காமராஜபுரம் எண் 2-14 என்ற முகவரியில் செயல்பட்டு வந்த இந்த அலுவலகம், திருமங்கலம் பள்ளி சாலையில் அமைந்துள்ள வி.5 திருமங்கலம் காவல் நிலைய கட்டடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டது. இங்கு 3-ஆவது, 4-ஆவது தளங்களில் இணை ஆணையா் அலுவலகம் இயங்கும் என்று சென்னை காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT