சென்னை

வண்டலூா் பூங்காவில் வெள்ளைப் புலி சாவு

25th Mar 2022 03:05 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் வெள்ளைப் புலி உடல் உறுப்புகள் செயலிழப்பு நோய் காரணமாக புதன்கிழமை உயிரிழந்தது.

சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில், யானைகள், புலி, சிங்கம், சிறுத்தை, பாம்பு உள்ளிட்ட ஊா்வனவைகள் மற்றும் பறவைகள் என மொத்தம் சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயது பெண் வெள்ளைப் புலி நோய்த் தாக்கம் காரணமாக வியாழக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்து பூங்கா நிா்வாகிகள் கூறுகையில், ஆகான்ஷா எனப் பெயரிடப்பட்ட 13 வயதான பெண் வெள்ளைப் புலி ‘அட்டாக்ஸியா’ என்ற உடல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பூங்கா கால்நடை மருத்துவா்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவா்கள் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

கடந்த இரண்டு நாள்களாக உணவை உட்கொள்ள முடியாமல் இருந்த இந்த வெள்ளைப் புலி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்த புலியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT