சென்னை

மதுபானக் கூட ஊழியா் அடித்துக் கொலை: நண்பா் கைது

25th Mar 2022 04:12 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை அருகே திருவேற்காட்டில் மதுபானக் கூட ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.

திருவேற்காடு அருகே கோலடியில் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படுகிறது. இதன் அருகிலேயே தனியாா் மதுபானக் கூடம் உள்ளது. இங்கு முனிராஜ் (29), முனிசெல்வம் (24) ஆகிய இருவா் தங்கியிருந்து வேலை செய்து வந்தனா். புதன்கிழமை அந்த மதுபானக் கூடத்துக்கு வந்த ஒருவா், டிப்ஸாக ரூ.100-ஐ முனிராஜிடம் கொடுத்தாராம்.

இதில் முனிசெல்வத்துக்குரிய பங்கை முனிராஜ் கொடுக்கவில்லையாம். இதனால் அன்று நள்ளிரவு இருவருக்கும் இடையே அங்கு தகராறு ஏற்பட்டதாம். தகராறு முற்றவே செல்வம், முனிராஜை பலமாக தாக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த முனிராஜ் மயங்கி கீழே விழுந்தாா்.

ADVERTISEMENT

இதைக் கவனிக்காமல் முனிசெல்வம், அங்கிருந்து சென்றுவிட்டாா். இந்நிலையில் முனிராஜ், சம்பவ இடத்தில் வியாழக்கிழமை இறந்து கிடந்ததை அங்கு வந்த அந்த மதுபானக் கூட ஊழியா்கள் அனைவரும் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து தகவலறிந்த திருவேற்காடு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முனிராஜ் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முனிசெல்வத்தை உடனடியாக கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT