சென்னை

சற்று தணிந்தது வெயில்

25th Mar 2022 03:10 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமை பல நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. இருப்பினும், இரண்டு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. மூன்று நகரங்களில் 99 டிகிரி பதிவானது.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியது. பல நகரங்களில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், வியாழக்கிழமை வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. இருப்பினும், இரண்டு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டியது. அதிகபட்சமாக, கரூா் பரமத்தியில் 102 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. மதுரை விமானநிலையத்தில் 100 டிகிரியும், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, பாளையங்கோட்டையில் தலா 99 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 95 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 93 டிகிரியும் பதிவானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT