சென்னை

திமுக நிா்வாகிகள் 8 போ் நீக்கம்

14th Mar 2022 03:25 AM

ADVERTISEMENT

கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய நிா்வாகிகள் 8 பேரை தற்காலிகமாக நீக்கியதாக திமுக பொதுச் செயலாளா் துரை முருகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான அவரது அறிவிப்பு: கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் கழகச் செயலாளா் எஸ்.கே.செந்தில்குமாா், தருமபுரி கிழக்கு மாவட்டம், பொ.மல்லாபுரம் கழகச் செயலாளா் உதயகுமாா், பேரூராட்சி முன்னாள்தலைவா் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரத்தைச் சோ்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமாா், தஞ்சை வடக்கு மாவட்டம் வேப்பத்தூா் கழக துணைச் செயலாளா் இராமச்சந்திரன், ஒன்றிய இளைஞா்அணி துணை அமைப்பாளா் இரா.இராஜதுரை ஆகியோா் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறாா்கள் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT