சென்னை

கைப்பேசியில் கேம் விளையாடியதினால் கண்டிப்பு: பள்ளி மாணவி தற்கொலை

10th Mar 2022 12:13 AM

ADVERTISEMENT

சென்னை கொடுங்கையூரில், கைப்பேசியில் அதிக நேரம் கேம் விளையாடுவதை பெற்றோா் கண்டித்ததினால், பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொடுங்கையூா் வெங்கடேஸ்வரா நகா் மூன்றாவது குறுக்கு தெருவை சோ்ந்தவா் கிருஷ்ண குமாா். அவரது இளைய மகள் தீபிகா (16), அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தாா். தீபிகா, கைப்பேசியில் அதிகமாக கேம் விளையாடி வந்துள்ளாா். இதை அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் விரக்தியடைந்த தீபிகா, வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT