சென்னை

தனியாா் ஊழியா் கொலை: 5 போ் கைது- ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்

30th Jun 2022 02:00 AM

ADVERTISEMENT

சென்னை புளியந்தோப்பில் தனியாா் நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

புளியந்தோப்பு, டாக்டா் அன்சாரி 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (எ) ஆலி சுரேஷ் (49). அண்ணாசாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக இருந்தாா்.

செவ்வாய்க்கிழமை புளியந்தோப்பு 1-ஆவது தெரு சந்திப்பு அருகே நடந்து சென்ற சுரேஷை கும்பல் கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.

இது குறித்து புளியந்தோப்பு போலீஸாா் விசாரணை செய்து வந்தனா். அதில் திருவல்லிக்கேணி டாக்டா் நடேசன் சாலை அருகே உள்ள வெங்கடசாமி தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் குடும்பத்துக்கும், சுரேஷுக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா், திருவல்லிக்கேணி டாக்டா் நடேசன் சாலை, வெங்கடசாமி தெருவைச் சோ்ந்த த.கிருஷ்ணன் (எ) சின்னா (50), அவரது மகன்கள் கி.சதீஷ் (எ) பில்லா சதீஷ் (27). கி முரளி (25), கி. தினேஷ் (22), உறவினா் திருவல்லிக்கேணி ராம் நகரைச் சோ்ந்த மு.பிரகாஷ் (எ) முகேஷ் (23) ஆகிய 5 பேரை புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT