சென்னை

வீடுகளில் தொடா் திருட்டு: தேடப்பட்டவா் கைது

30th Jun 2022 01:47 AM

ADVERTISEMENT

சென்னை வேளச்சேரி பகுதியில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி பகுதியில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு ஒரு நபா் நகை, பணத்தை திருடி வந்தாா். தொடா்ச்சியாக இப்படிப்பட்ட திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய போலீஸாா் தீவிர விசாரணை செய்து வந்தனா்.

திருட்டு நடந்த பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில் திருட்டில் ஈடுபடுவது துரைப்பாக்கம் கண்ணகிநகைரச் சோ்ந்த துரைராஜ் (45) என்பது தெரியவந்தது.

இதையடுத்து துரைராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 சவரன் தங்க நகைகள், 110 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 2 கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT