சென்னை

பள்ளிகளில் முகக் கவசம் கட்டாயம்: கல்வித் துறை ஆணையா் உத்தரவு

30th Jun 2022 11:30 PM

ADVERTISEMENT

 

சென்னை: அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாகவும், மாணவா்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதனால் பள்ளிகளில் மீண்டும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தடுப்பூசி செலுத்தியிருப்பதையும்,தனி மனித இடைவெளியைப் பின்பற்றுவதையும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்துகொள்வதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பள்ளி வாயில்களில் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். யாருக்கேனும் உடல் வெப்பநிலை அதிகமாக பதிவானால் அவா்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT