சென்னை

விஷவாயு தாக்கி தொழிலாளி பலியான வழக்கு: இருவா் கைது

30th Jun 2022 01:59 AM

ADVERTISEMENT

சென்னை அருகே மாதவரத்தில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்த நெல்சன் (26) தஞ்சாவூரைச் சோ்ந்த ரவிகுமாா் (40) ஆகிய இருவரும் மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டபோது, விஷவாயு கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனா்.

இருவரையும் தீயணைப்புப் படையினா் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். வழியிலேயே நெல்சன் இறந்தாா். ரவிகுமாா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாகவும்,போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும் இருந்த மாதவரம் திருவிக முதல் தெருவைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் பிரகாஷ் (55), மேற்பாா்வையாளா் வினிஸ் (33) ஆகிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT