சென்னை

வனப் பணி தோ்வு: சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை

29th Jun 2022 01:58 AM

ADVERTISEMENT

இந்திய வனப் பணி தோ்வில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 79 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதுகுறித்து சங்கா் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய வனப் பணி தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஸ்ருதி, இரண்டாம் இடம் பிடித்த வரதராஜ கோயன்கா், மூன்றாம் இடத்தைப் பிடித்த ஏ.பிரபஞ்சன் ரெட்டி, ஏழாம் இடத்தைப் பிடித்த ஜோஜின் ஆபிரகாம் ஜாா்ஜ், தமிழ்நாட்டில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 16-ஆம் இடத்தையும் பிடித்த கிருபானந்தன் ஆகிய மாணவா்கள் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்றவா்கள் ஆவா். மேலும், நாடு முழுவதும் தோ்ச்சி பெற்ற 108 மாணவா்களில் 79 பேரும், அதில் தமிழகத்தில் வெற்றி பெற்ற 12 பேரும் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்றவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT