சென்னை

பத்திரிகையாளா் நல வாரியத்தின் 2-வது கூட்டம்

29th Jun 2022 02:02 AM

ADVERTISEMENT

பத்திரிகையாளா் நல வாரியத்தின் இரண்டாவது கூட்டம் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி அவா் பேசியது:-

நல வாரியக் கூட்டமானது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்று கூறினாலும், பத்திரிகையாளா்களின் நலன் கருதி தேவைப்படும் நேரங்களில் கூட்டத்தை முன்பே நடத்தலாம். பத்திரிகையாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், செய்தித் துறை கூடுதல் இயக்குநா் தி.அம்பலவாணன் மற்றும் நலவாரிய உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT