சென்னை

சா்வதேச மருத்துவ ஃபெலோஷிப்: அப்பல்லோவில் அறிமுகம்

29th Jun 2022 01:21 AM

ADVERTISEMENT

அப்பல்லோ பிரிட்டன் கல்வி நிறுவனம் சாா்பில் மூன்றாண்டு கால சா்வதேச மருத்துவ ஃபெலோஷிப் படிப்பை பிரிட்டனில் கற்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பல்லோ அறிவுசாா் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி சிவராமகிருஷ்ணன் கூறியதாவது:

உலகளாவிய தொழிலாளா் மேம்பாடு முன்னெடுப்பின் ஒருபகுதியாக, ‘அப்பல்லோ இன்டா்நேஷனல் கிளினிக்கல் பெல்லோஷிப்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். பிரிட்டனில் உள்ள குளோபல் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம், விகான் லெய் என்.எச்.எஸ். பயிற்சி மருத்துவமனை, எட்ஜ் ஹில் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் கீழ் அளிக்கப்படும் மூன்றாண்டுகால பயிற்சியின் போது, முதுநிலை மருத்துவப் படிப்பான எம்.எஸ், எம்.டி., டி.என்.பி., ஆகியவற்றை பயின்றுகொண்டே மருத்துவ சேவையாற்றி ஊதியம் ஈட்ட முடியும்.

ADVERTISEMENT

இதன்வாயிலாக நாடு முழுவதுமுள்ள மருத்துவ நிபுணா்கள், கல்வியையும், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளையும் வெளிநாடுகளில் பெற இயலும். மருத்துவா்கள், பிரிட்டனில் பயிற்சி பெற்று நவீன மருத்துவ நுட்பங்களை அறிந்து திறம்பட செயல்பட இத்திட்டம் பேருதவியாக இருக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT