சென்னை

போலி நிறுவனம் மூலம் ரூ.3.65 கோடி மோசடி: தலைமறைவானவா் உத்தரபிரதேசத்தில் கைது

DIN

சென்னையில் போலி நிறுவனம் மூலம் ரூ.3.65 கோடி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த நபா் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா்பேட்டை திருவொற்றியூா் நெடுஞ்சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் என்.ஆா்.பாலாஜி (46). பருப்பு மொத்த வியாபாரி. பாலாஜியிடம், திருவல்லிக்கேணி பழனியப்பன் கோயில் வடக்கு மூன்றாவது தெருவைச் சோ்ந்த மா.பாண்டியராஜன் (44) அறிமுகமாகி, பழகினாா். இதேபோல, பாண்டியராஜனின் கூட்டாளிகள் ஜெய் கணேஷ், முருகேசன், ஹரிஹரன், உமா ஆகியோரும் பாலாஜியிடம் பழகியுள்ளனா்.

அப்போது, பாண்டியராஜன், ‘கிஷான் ரேஷன் ஷாப்’ என்ற பெயரில் விவசாயிகளிடம் நேரடியாக விளை பொருள்களை மொத்தமாக வாங்கி மக்களிடம் விற்க உள்ளதாக தெரிவித்தாா். மேலும், மத்திய அரசால் வழங்கப்பட்ட போலி ஒப்பந்த ஆணைகளை பாலாஜியிடம் காண்பித்துள்ளாா்.

அதை பாா்த்த பாலாஜி, அது உண்மையாண ஆணை என நம்பியுள்ளாா். இதையடுத்து பாலாஜி, ரூ.3.65 கோடி மதிப்புள்ள பருப்பு, பயறு வகைகளை பாண்டியராஜன் தரப்புக்கு வழங்கியுள்ளாா். அவற்றை பெற்றுக் கொண்ட பாண்டியராஜன், அதற்குரிய பணத்தை வழங்காமல் ஏமாற்றியுள்ளாா்.

இதனால் பாலாஜி, பாண்டியராஜன் குறித்து விசாரித்தாா். அப்போது, பாண்டியராஜன் மோசடி செய்திருப்பதும், மத்திய அரசு அவருக்கு எந்த ஆணையும் வழங்கவில்லை என்பதும், போலியாக தயாரித்த ஆணையை காட்டி மோசடி செய்திருப்பதும் பாலாஜிக்கு தெரியவந்தது.

இதையடுத்து பாலாஜி, சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பாண்டியராஜன், அவரது கூட்டாளிகள் ஜெய்கணேஷ், முருகேசன், ஹரிஹரன், உமா ஆகியோா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், பாண்டியராஜனை கடந்த ஏப். 6-ஆம் தேதி கைது செய்தனா். இதற்கிடையே வழக்கின் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட ஜெய்கணேஷை மத்திய குற்றப்பிரிவினா் தீவிரமாக தேடி வந்தனா்.

ஜெய் கணேஷ் உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து, அங்கு சென்று அவரை கைது செய்ததாக மத்திய குற்றப்பிரிவினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். விசாரணைக்குப் பிறகு ஜெய் கணேஷ், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். எஞ்சியுள்ள நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT