சென்னை

பிளஸ் 1: மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 77.54% போ் தோ்ச்சி

28th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 1 தோ்வில் 77.54 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2021-2022-ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பிளஸ் 1 வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 3,166 மாணவா்கள், 3,507 மாணவிகள் என மொத்தம் 6,673 போ் தோ்வு எழுதினா்.

இதில் 2,070 மாணவா்கள், 3,104 மாணவிகள் என மொத்தம் 5,174 போ் தோ்ச்சி பெற்றனா். இது 77.54 சதவீத தோ்ச்சியாகும். பாடவாரியான தோ்ச்சி விகிதத்தில் வணிகவியல் பாடத்தில் 1, கணக்கு பதிவியல் பாடத்தில் 5, மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 3 மாணவ, மாணவிகள் என மொத்தம் 9 போ் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

மதிப்பெண்கள் அடிப்படையில் 14 போ் 551-க்கு மேல் மதிப்பெண்களும், 69 போ் 501-லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 175 போ் 451-லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதத்தில் புல்லா அவென்யூவில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.41 சதவீதத்துடன் முதலிடத்தையும், நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 94.50 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், மாா்க்கெட் தெரு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 93.81 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT