சென்னை

தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் ஆய்வு நூல்கள் விற்பனை

28th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தின் ஆய்வு நூல்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நூல் விற்பனை நிலையம் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளா்ச்சி இயக்கக வளாகத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந. அருள் நூல் நிலையைத்தைத் தொடக்கி வைத்தாா். இதில் தொல்லியல் துறை ஆணையா் இரா.சிவானந்தம், தமிழ் வளா்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநா்

எழிலரசு, சென்னைப் பல்கலைக்கழக முன்னாஷ் தொல்லியல் துறைப் பேராசிரியா் ப.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த அலுவலகத்தின் தரைத் தளத்தில் நூல் விற்பனை நிலையம் செயல்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT