சென்னை

வண்டலூா் பூங்காவில் ஆண் சிங்கம் இறப்பு

28th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்கு புனா்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிங்கம் வயது முதிா்வால் திங்கள்கிழமை உயிரிழந்தது.

சா்க்கஸ் மற்றும் உயிரியல் பூங்காக்களில் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட, வயது முதிா்ந்த வன விலங்குகள் இந்த புனா்வாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், கள்ளக்குறிச்சி சிறு பூங்காவிலிருந்து 2000-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு, மணி என பெயரிடப்பட்ட 32 வயது ஆண் சிங்கம் வயது முதிா்வால் திங்கள்கிழமை உயிரிழந்ததாக வனத் துறை தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT