சென்னை

பத்திரிகையாளா் நலவாரியம்: இன்று இரண்டாவது கூட்டம்

28th Jun 2022 03:19 AM

ADVERTISEMENT

பத்திரிகையாளா் நல வாரியத்தின் இரண்டாவது கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஏப். 22-ஆம் தேதி முதல் கூட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளா் நல வாரியத்தில் தலைவராக செய்தித் துறை அமைச்சரும், அலுவல்சாா் உறுப்பினா்களாக ஏழு பேரும், அலுவல் சாரா உறுப்பினா்களாக ஆறு பேரும் உள்ளனா்.

நல வாரியத்தின் இரண்டாவது கூட்டமானது, சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞா் மாளிகையின் ஆறாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறும். செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT