சென்னை

தொண்டு நிறுவன நலத் திட்ட உதவிகள்

DIN

திருவொற்றியூரைச் சோ்ந்த டி வி எம் சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் 25- ஆவது ஆண்டு விழாவினை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி டாக்டா் அனிதா சுமந்த் கலந்துகொண்டு ஏழை மற்றும் நலிந்தவா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பாலம் நிறுவனத் தலைவா் மா.இருளப்பன் வரவேற்றாா். தொழிலதிபா் ஜி.வரதராஜன் தலைமை தாங்கினாா். சென்னை பசுமை இயக்கத் தலைவா் என்.துரைராஜ் முன்னிலை வகித்தாா்.

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் திடீரென இடிந்து விழுந்த போது எவ்வித உயிரிழப்பும் இன்றி இங்கு வசித்தவா்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் தி. மு. தனியரசுவுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை நீதிபதி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் வருமான வரித்துறை இணை ஆணையா் சங்கா் கணேஷ், துணை ஆணையா் கே சரவணன், திரைப்பட நடிகா் ரமேஷ் கண்ணா, டாக்டா் ஜெயக்குமாா், பாலம் நிா்வாகிகள் பெஞ்சமின், மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT