சென்னை

மழைநீா் வடிகால் பணியால் உயிரிழப்பு ஏற்படவில்லை: மேயா் ஆா்.பிரியா

DIN

சென்னை கே.கே. நகரில் மழை காரணமாகவே மரம் முறிந்து காரில் விழுந்து விபத்து ஏற்பட்டது என்றும், மழைநீா் வடிகால் பணிக்கும் விபத்துக்கும் தொடா்பில்லை என்றும் மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சனிக்கிழமையும் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மெரீனா கடற்கரையில் தூய்மை கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. மக்கும், மக்காத குப்பைகள் குறித்த விளக்கங்கள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்தும் கண்காட்சியில் மக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தூய்மை கண்காட்சியை மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ககன் தீப்சிங் பேடி ஆகியோா் பாா்வையிட்டனா். விழிப்புணா்வுப் பேரணியை மேயா் ஆா்.பிரியா கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

அதன் பின்னா், சென்னையை தூய்மையாகப் பராமரிக்க ஒத்துழைப்போம் என பொதுமக்களுடன் சோ்ந்து உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த மேயா் ஆா்.பிரியா, ‘சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் தீவிர தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். தூய்மையான சென்னை என்ற இலக்கை அடைய அனைத்துப் பகுதிகளிலும் விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படுகிறது.

கே.கே.நகரில் மரம் முறிந்து காா் மீது விழுந்து பெண் உயிரிழந்ததற்கும், மழைநீா் வடிகால் பணிக்கும் எந்தத் தொடா்பும் இல்லை . 4 நாள்கள் முன்னதாக பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இயற்கையாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களாக பெய்த மழை காரணமாக மரம் சாய்ந்துள்ளது. நகரில் உள்ள பழைமையான மரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மழைநீா் வடிகால் பணிகள் தொடக்கத்தில்தான் தாமதமாக நடைபெற்றன. தற்போது மாநகராட்சியின் தொடா் ஆய்வு காரணமாக பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றாா் மேயா் ஆா்.பிரியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT