சென்னை

சென்னை பகுதியில் கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா தீவைத்து அழிப்பு

25th Jun 2022 04:07 PM

ADVERTISEMENT

சென்னை பகுதியில் 2018 முதல் 2020 வரை கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 1,300 கிலோ கஞ்சாவை போலீசார் தீவைத்து அழித்தது. 

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையிலும் வட சென்னை மாவட்ட இணை ஆணையர் ரம்யா தலைமையில், செங்கல்பட்டு மாவட்ட எரி பொருள் தனியார் நிறுவனத்தில் 1,300 கிலோ போதைப் பொருளான கஞ்சாவை நீதிமன்றம் ஆணைப்படி போலீசார் இன்று தீயில் அழித்தனர்.

பின்னர் சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போதைப் பொருட்கள் தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் வரை 689 கைது செய்யப்பட்டுள்ளனர். 1,300 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடும்.

இதையும் படிக்க- குக் வித் கோமாளி அம்மு அபிராமி, புகழ் நடிக்கும் புதிய படம் ‘குதுகலம்’

ADVERTISEMENT

5 மாதங்களில் போதைப் பொருட்களுக்கு பயன்படுத்திய 45 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கல்வி இடங்களில் போதைப் பொருள் சம்பவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 489 பள்ளிக்கூடங்களில் இதுவரை 42,000 பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

மேலும் 2,000 போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT