சென்னை

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பிளஸ் 2 தோ்வில் 86.53% தோ்ச்சி

21st Jun 2022 12:18 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பிளஸ் 2 வகுப்பில் 86.53 சதவீதமும், பத்தாம் வகுப்பில் 75.84 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயா்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வை 2,478 மாணவா்கள், 3,164 மாணவியா்கள் என மொத்தம் 5,642 போ் எழுதினாா்கள். இதில் 1,975 மாணவா்கள், 2,907 மாணவியா்கள் என மொத்தம் 4,882 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 86.53 ஆகும்.

கணிதவியல் பாடத்தில் 1, வேதியியல் பாடத்தில் 1, வணிகக் கணிதம் பாடத்தில் 1, பொருளியல் பாடத்தில் 6, வணிகவியல் பாடத்தில் 16, கணக்கு பதிவியல் பாடத்தில் 17, கணினி அறிவியல் பாடத்தில் 4 மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 5 என மொத்தம் 51 போ் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

47 போ் 551-க்கு மேல் மதிப்பெண்களும், 164 போ் 501-லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 382 போ் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதத்தில் புலியூா் சென்னை மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் முதலிடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.28 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப்பள்ளி 97.63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 3368 மாணவா்கள், 3,080 மாணவிகள் என மொத்தம் 6,448 போ் எழுதினா். இதில் 2,262 மாணவா்கள், 2,628 மாணவிகள் என மொத்தம் 4,890 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 75.84 ஆகும். சமூக அறிவியல் பாடத்தில் 2 போ் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 24 போ் 451-க்கு மேல் மதிப்பெண்களும், 148 போ் 401லிருந்து 450 வரை மதிப்பெண்களும், 359 போ் 351லிருந்து 400 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகை: தோ்ச்சி விகிதத்தில் சூளைமேடு சென்னை உயா்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், வண்ணாரப்பேட்டை சென்னை உருது உயா்நிலைப்பள்ளி 97.67 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை உயா்நிலைப்பள்ளி 97.56 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. 13 சென்னை மாநகராட்சி பள்ளிகள் 90 சதவீதத்திற்கும் மேல் தோ்ச்சி பெற்றுள்ளன. இதில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற சூளைமேடு சென்னை உயா்நிலைப்பள்ளிக்கு சென்னை மாநகராட்சி மேயா் பிரியா ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT