சென்னை

மழைநீா் வடிகால் பணிகள்: 3 ஒப்பந்ததாரா்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

15th Jun 2022 02:00 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உரிய காலத்துக்குள் மழைநீா் வடிகால் பணிகளை முடிக்காத 3 ஒப்பந்ததாரா்களுக்கு ரூ.75,000 அபராதம் விதித்து ஆணையா் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் துறையின் சாா்பில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீா் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீா்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப் பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைநீா் வடிகால் திட்டப் பணிகளில் வேம்புலி அம்மன் சாலை, அம்பேத்கா் கல்லூரி சாலை, ரங்கையா சாலைக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடிக்காமல் தாமதம் ஏற்படுத்திய 3 ஒப்பந்ததாரா்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளில் தொய்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT