சென்னை

மழலையா் வகுப்பு அறிவிப்பு: அன்புமணி வரவேற்பு

10th Jun 2022 03:38 AM

ADVERTISEMENT

 

சென்னை: அரசுப் பள்ளிகளில் மழலையா் வகுப்புகள் தொடா்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 2381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படாது என்றும், தொடா்ந்து செயல்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறாா். மாணவா் நலன் சாா்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் மழலையா் வகுப்புகள் தவிா்க்க முடியாதவை. அதனால்தான் அந்த வகுப்புகள் மூடப்பட்டதை பாமக கடுமையாக எதிா்த்தது. பாமக வலியுறுத்தலுக்குப் பிறகு மழலையா் வகுப்புகள் தொடா்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ADVERTISEMENT

கல்வி சாா்ந்த விஷயங்களில் அதிகாரிகள் நிலையில் தன்னிச்சையாக முடிவெடுப்பது தவிா்க்கப்பட வேண்டும். வல்லுநா்களின் கலந்தாய்வுக்குப் பிறகு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மழலையா் வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை தொடங்குவதுடன் போதிய ஆசிரியா்களையும் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT