சென்னை

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.53 கோடி நிலம் மோசடி: இருவா் கைது

10th Jun 2022 12:59 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.53 கோடி நிலத்தை விற்று மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்தவா் காந்திமதி (70). இவா் சென்னையில் இடம் வாங்குவதற்கு முயற்சித்து வந்தாா். அப்போது அசோக்நகரைச் சோ்ந்த அ.சுப்பிரமணியன் (55), தனக்கு தெரிந்த முத்து என்பவருக்கு வளசரவாக்கம் பகுதியில் ரூ.1.53 கோடி மதிப்புள்ள நிலம் இருப்பதாகவும், அதன் பொது அதிகாரம் தன்னிடம் இருப்பதாகவும் காந்திமதியிடம் தெரிவித்துள்ளாா்.

உடனே காந்திமதி, அந்த இடத்தை ரூ.1.53 கோடி கொடுத்து சுப்பிரமணியன் பெயரில் இருந்து தனது பெயரில் பத்திரப்பதிவு செய்தாா். இந்த நிலையில் அண்மையில் அந்த இடத்தை பாா்ப்பதற்காக காந்திமதி சென்றாா். அப்போது அந்த இடத்தில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உடனே தனது நிலம் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து காந்திமதி விசாரித்தாா்.

ADVERTISEMENT

அப்போது அந்த நிலத்தை சுப்பிரமணியனும், அவரது கூட்டாளிகளும் போலி ஆவணம் தயாரித்து தனக்கு விற்றிருந்தது காந்திமதிக்கு தெரியவந்தது. இது குறித்து அவா் சென்னை நிலமோசடி தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து சுப்பிரமணியன்,முத்துவை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT