தாம்பரம்: சென்னையை அடுத்த வண்டலூர் கிரசென்ட் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பயணிக்க 300 மிதிவண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் ஏ.பீர்முகமது கூறினார்.
உலக மிதிவண்டி பயன்பாடு நாள் தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அயூப் கான் தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.