சென்னை

உதகையிலிருந்து சென்னை திரும்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 

9th Jun 2022 01:46 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 5-ம்தேதி குடும்பத்தினருடன் உதகை வந்த ஆளுநர், ராஜ்பவன் மாளிகையில் தங்கியிருந்தார். 

உதகையில் உள்ள ஏகலைவா பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் இன்று காலையில் ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற சூழல் போராளி பிர்சா முண்டாவின் 122-வது நினைவு நாள் பழங்குடி மக்களுடன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். 

அதைத் தொடர்ந்து உதகையிலிருந்து கோத்தகிரி வழி சாலை வழியாக கோவை சென்றடைந்தார். கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT