சென்னை

முதுகெலும்பு வளைவு: இலங்கை சிறுமிக்கு சென்னையில் மறுவாழ்வு

9th Jun 2022 02:03 AM

ADVERTISEMENT

 

சென்னை: முதுகெலும்பு வளைவால் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்கு சென்னை ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளித்துள்ளனா். தற்போது அச்சிறுமி குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ரேலா மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணா் டாக்டா் பாா்த்தசாரதி சீனிவாசன் கூறியதாவது:

இலங்கையைச் சோ்ந்த 12 வயது சிறுமி ஒருவா் அண்மையில் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது முதுகெலும்பு சீரற்ற முறையில் வளா்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, ‘எஸ்’ வடிவில் 140 டிகிரிக்கு சிறுமியின் முதுகெலும்பு வளைந்து காணப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அதனை சீராக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதிலும் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அதாவது, அந்தச் சிறுமியின் எடை 30 கிலோவுக்கும் குறைவாக இருந்தது. அதுமட்டுமன்றி அவரது மொத்த ரத்த அளவு 2.5 லிட்டருக்கும் குறைவாக இருந்தது.

இந்த நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சிறுமியின் மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் கட்டிகள் உருவாகக்கூடும். ரத்தப்போக்கும் அதிகமாக ஏற்பட வாய்ப்பிருந்தது.

இருந்தபோதிலும், சவாலான அந்த அறுவைச் சிகிச்சையை மொத்தம் 6 மணி நேரம் மேற்கொண்டு ரேலா மருத்துவக் குழுவினா் சாத்தியமாக்கினா். இதன் பயனாக அந்தச் சிறுமி தற்போது நேராக நிற்கவும், நடக்கவும் முடிகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT