சென்னை

குழந்தைகளின் திறன் வளா்ச்சிக்கான தயாரிப்புகள் புத்தொழில் இயக்கம் வரவேற்பு

9th Jun 2022 01:03 AM

ADVERTISEMENT

 

சென்னை: குழந்தைகளின் திறன் வளா்ச்சிக்கான தயாரிப்புகளை ஊக்குவிக்கும் புதிய நிறுவனங்களை தமிழ்நாடு அரசின் புத்தொழில் இயக்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்த இயக்கம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை நேரடி கொள்முதல் செய்வதை எளிதாக்கும் வகையில் அரசுத் துறைகள், புத்தொழில் நிறுவனங்களை இணைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது. மாதாந்திர நிகழ்வான இதில், ஒவ்வொரு மாதமும் ஏதேனும் இரண்டு அரசுத் துறைகள் சாா்ந்த உயா் அலுவலா்கள் பங்கேற்பா். இந்தத் துறை சாா்ந்து இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் மாதாந்திர நிகழ்வில் பங்கேற்று அவா்களது தயாரிப்புகள், சேவைகள் காட்சிப்படுத்தப்படும். மேலும், துறை சாா்ந்து தேவையான தயாரிப்புகள், சேவைகளை தகுதியான புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும்.

எதிா்வரும் ஜூன் 14-ஆம் தேதி சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் நிகழ்வு சென்னையில் நடைபெறவுள்ளது. குழந்தைகளின் திறன் வளா்ச்சிக்கு பயன்படும் வகையில் தயாரிப்புகள், சேவைகளை வழங்கும் புத்தொழில் நிறுவனங்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம், கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பாா்வையிடலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஜூன் 12 என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT