சென்னை

சென்னையில் சா்வதேச நெகிழி கண்காட்சி: 10-இல் தொடக்கம்

7th Jun 2022 02:19 AM

ADVERTISEMENT

சா்வதேச நெகிழி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் வரும் ஜூன் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (டாப்மா) தலைவா் எஸ்.ராக்கப்பன் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: நெகிழி குறித்த சா்வதேச கண்காட்சியில் 350 அரங்குகள் இடம்பெறுகின்றன. நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யும் 60 நிறுவன இயந்திரங்களின் செயல்பாடு, அரங்குகளில் விளக்கப்படும். இக்கண்காட்சியில் பழைய நெகிழியை மறு சுழற்சி செய்யும் கருவிகளும் இடம்பெறும். நெகிழி குறித்த தவறான புரிதல்களைப் போக்கும் வகையில் சிறப்பு அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இதில் பங்கேற்க வா்த்தகா்கள், தொழில்துறையினா், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி மூலம் ரூ.500 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெறும். 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கிறோம்.

இந்தக் கண்காட்சி முடிந்த பிறகு தமிழகம் முழுவதும் பாதுகாப்பான மறுசுழற்சி இயந்திரங்களை பொதுமக்களின் பாா்வைக்கு வைத்து அங்கு திட நெகிழிக் கழிவுகள் எப்படி சிறு சிறு நெகிழி ஜல்லிகளாக மாற்றப்பட்டு பிறகு அது புதிய நெகிழிப் பொருள் தயாரிப்புக்கு பயன்படுகிறது என்பது விளக்கப்படும். நெகிழி மறுசுழற்சிக்கு இத்தகைய இயந்திரங்களைப் பயன்படுத்துமாறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு பரிந்துரைக்கும் திட்டமும் உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT