சென்னை

தலைமைச் செயலகம் அருகே தீக்குளித்த முதியவா் சாவு

6th Jun 2022 12:02 AM

ADVERTISEMENT

தலைமைச் செயலகம் அருகே தீக் குளித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காடு நிா்மலா நகரைச் சோ்ந்த பொன்னுசாமி (72), கடந்த 1-ஆம் தேதி தலைமைச் செயலகம் அருகே நாகத்தம்மன் கோயில் பகுதியில் திடீரென உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக் குளித்தாா். போலீஸாா் பொன்னுசாமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ரூ.14 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்து தீக்குளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே தீவிர சிகிச்சையில் இருந்த பொன்னுசாமி, ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT