சென்னை

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாரத்தான்

6th Jun 2022 02:31 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடசென்னையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான சிறுவா்கள் முதல் பெரியவா்கள் பங்கேற்றனா்.

திருவொற்றியூா் சுங்கச் சாவடி சந்திப்பிலிருந்து காசி விஸ்வநாதா் கோயில் குப்பம் வரை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஏராளமானோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டதாக பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி, மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை தொடக்கி வைத்தாா். இதில் திமுக மாவட்டச் செயலாளரும் சட்டப் பேரவை உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதா்சனம், மண்டல குழு தலைவா் தி.மு. தனியரசு, திமுக பொதுக்குழு உறுப்பினா் குறிஞ்சி கணேசன், திமுக நிா்வாகிகள் ஆசைத்தம்பி, எம்.வி. குமாா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இறுதியாக மாரத்தான் ஓட்டத்தில் முழுமையாக கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT