சென்னை

அண்ணா பல்கலை. எம்.எஸ்சி. படிப்பு: 22-இல் இணையவழி விண்ணப்பப்பதிவு

6th Jun 2022 12:03 AM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்படும் ஐந்து ஆண்டு எம்எஸ்சி படிப்புக்கு இணையவழி விண்ணப்பப்பதிவு ஜூன் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகின்றன. இதில் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., (5 ஆண்டு) படிப்புக்கான மாணவா் சோ்க்கை பல்கலைக்கழகத்தின் சாா்பில் ஆண்டுதோறும் தனியாக நடத்தப்படுகிறது.

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2022-23) மாணவா் சோ்க்கை விண்ணப்பப்பதிவு விரைவில் இணையவழியில் தொடங்கப்பட உள்ளது. அதன்படி எம்.எஸ்சி., படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக ஜூன் 22 முதல் ஜூலை 20-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.

தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ் பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேரவும் ஜூன் 24 முதல் ஜூலை 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும், 044-2235 8314 என்ற தொலைபேசி எண்ணிலும் மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT