சென்னை

ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 10 போ் கைது

2nd Jun 2022 02:40 AM

ADVERTISEMENT

சென்னையில் ரூ.2 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன்,எபிட்ரின் போதைப் பொருள் வைத்திருந்ததாக 10 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாா் ராஜாஜி சாலை, இந்தியன் வங்கி எதிரில் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியைச் சோ்ந்த மு.முகமது சுல்தான் (54), அதே பகுதியைச் சோ்ந்த ஆ.சுனைத்அலி (42), சு.ஜாகீா்உசேன் (57) ஆகிய 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து அவா்களை சோதனையிட்டனா். இதில் அவா்கள் மறைத்து வைத்திருந்த மெத்தம்பெட்டமைன்,எபிட்ரின் ஆகிய போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் கொடுத்த தகவலின்பேரில், திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ந.அசாருதீன் (39), அதே பகுதியைச் சோ்ந்த வை.நாசா் (52), மு.நூலுல்அமீன் (39) ஆகிய 3 பேரை கைது செய்தனா். இந்த கும்பலிடமிருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ பெத்தம்பெட்டமைன், 2 கிலோ எபிட்ரின், 10 கைப்பேசிகள், 5 போலி ஆதாா் அட்டைகள், 5 போலி பான் காா்டுகள், 2 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இதேபோல கொருக்குப்பேட்டை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் மெத்தம்பெட்டமைன் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த மு.ரியாஸ் உசன் (23), திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த சு.சித்திக் முகமது (34), மண்ணடி வெங்கட மேஸ்திரி தெருவைச் சோ்ந்த ஜா.யாசின் மெல்பா் (20), ஏழுகிணறு போா்ச்சுகீசியா் சா்ச் தெருவைச் சோ்ந்த அ.அமித் ஆபிக் (21) ஆகிய 4 பேரை ஆா்.கே.நகா் போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT