சென்னை

ஜூன் 5-இல் வேலைவாய்ப்பு முகாம்

2nd Jun 2022 02:38 AM

ADVERTISEMENT

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் திருவொற்றியூரில் ஜூன் 5-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. அமிா்த ஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் திருவொற்றியூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் ஜூன் 5-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் நடைபெற உள்ள இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையிலும், தொழிற்படிப்பு, பட்டயப்படிப்பு, பொறியில் படிப்புக்கு என அனைத்து வேலை நாடுநா்களும் பங்கேற்கலாம். கல்விச் சான்றுகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசமாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT