சென்னை

மருத்துவமனையில் சிறைக் கைதி உயிரிழப்பு

27th Jul 2022 12:55 AM

ADVERTISEMENT

சென்னை புழல் சிறைக் கைதி உடல் நலன் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் இறந்தாா்.

வண்டலூா் மேலகோட்டையூா் அருகே உள்ள கண்டிகை வலம்புரிநகரைச் சோ்ந்தவா் சு.மாரீஸ்வரன் (47). இவா் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையில் உடல் நலன் பாதிக்கப்பட்ட மாரீஸ்வரன், கடந்த 9-ஆம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரீஸ்வரன் செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தாா். புழல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT