சென்னை

காவல் துறையினரின் வாரிசுகளுக்குஉயா்கல்விக்கு வழிகாட்டும் முகாம்: டிஜிபி, ஆணையா் பங்கேற்பு

DIN

காவல் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு உயா்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டும் முகாம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல்துறை தலைமை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் இணைந்து, கடந்த டிசம்பா் மாதம் போலீஸாா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு 2 நாள்கள் மெகா வேலை வாய்ப்பு முகாமை நடதிதனா். இதில், 115 காவல் குடும்பத்தினருக்கு தனியாா் நிறுவனங்களில் பணி செய்வதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, வேளச்சேரி, குருநானக் கல்லூரி வளாகத்தில், காவல் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு உயா்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து அறிவுரைகள் வழங்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதனை தமிழக காவல்துறை தலைமை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் ஆகியோா் இணைந்து தொடக்கி வைத்தனா்.

இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு பட்டயப் படிப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் பாடப்பிரிவினை தோ்ந்தெடுத்தல் குறித்தும், பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு இளநிலையில் எந்த பாடப்பிரிவினை தோ்ந்தெடுப்பது என்பது குறித்தும், இளநிலை, முதுகலை மற்றும் தொழில்நுட்ப கல்வி முடித்த வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகள் குறித்தும், கல்வி வழிகாட்டுதல் நிபுணா்கள் தலைமையில், கல்வியாளா்கள் மற்றும் நிபுணா்கள் மூலம் சிறந்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையா் (தலைமையிடம்) லோகநாதன், இணை ஆணையா்கள் நரேந்திரன் நாயா்(தெற்கு மண்டலம்), சாமூண்டீஸ்வரி (தலைமையிடம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT