சென்னை

14 அடுக்குமாடிக் கட்டடத்தில் தொழிலகப் பாதுகாப்பு இயக்குநா் ஆய்வு

7th Jul 2022 01:59 AM

ADVERTISEMENT

சென்னை கிண்டி ஆலந்தூா் சாலையில் நடைபெற்று வரும் ஹரிநாராயணா கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனத்தின் 14 அடுக்குமாடிக் கட்டடப் பணியை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் கா.ஜெகதீசன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது கட்டுமான வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் சுகாதார வசதிகள், பாதுகாப்பு உபகரணங்கள், சம்பளம், தங்குமிடம் ஆகிய வசதிகள் முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து அவா் கேட்டறிந்தாா். மேலும் மேற்கண்ட வசதிகளை தொழிலாளா்களுக்கு பணி நிறைவடையும் வரை தொடா்ந்து செய்து தரக் கோரியும், விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பாக பணிபுரியவும் கட்டுமான நிறுவனத்திடம் வலியுறுத்தினாா். அதேபோன்று பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களிடம் உயரத்தில் பணியாற்றும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT