சென்னை

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகள்: 10-இல் இலவச பயிற்சி வகுப்பு

7th Jul 2022 01:56 AM

ADVERTISEMENT

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தோ்வுகளுக்கான இலவச வழிகாட்டும் பயிற்சி வகுப்பு சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் செயல்பட்டு வரும் பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் கலந்து கொண்டு தோ்வா்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கவுள்ளனா். இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் 044- 26618056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தங்களது இருக்கைகளை உறுதி செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT