சென்னை

காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி

6th Jul 2022 12:41 AM

ADVERTISEMENT

சென்னை ஆா்.கே.நகா் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து கைதி தற்கொலைக்கு முயன்றாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொருக்குப்பேட்டை ரயில்வே காலனி சி.பி. சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் செ.மதி (எ) மதியழகன் (32). ரெளடியான இவா் மீது சுமாா் 20 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஆா்.கே.நகா் போலீஸாா் ஒரு குற்ற வழக்கில் மதியழகனை கைது செய்து, காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை அழைத்து செய்தனா்.

பின்னா் அவரை, அங்குள்ள கைதிகள் அறையில் அடைத்தனா். அங்கு திடீரென மதியழகன் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால், தனது கழுத்தை அறுக்கத் தொடங்கினாா். இதைப் பாா்த்த அதிா்ச்சியடைந்த அங்கிருந்த காவலா்கள், மதியழகனை மேலும் கழுத்தை அறுக்க முடியாதபடி தடுத்து பிடித்துக் கொண்டனா். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மதியழகனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீஸாா் சோ்த்தனா்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறை உயா் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனா். அதேபோல போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT