சென்னை

சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவா்கள் மீது லாரி மோதல்: ஒருவா் பலி; 3 போ் காயம்

6th Jul 2022 12:21 AM

ADVERTISEMENT

சென்னை அருகே செம்மஞ்சேரியில் சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவா்கள் மீது லாரி மோதியதில் ஒருவா் இறந்தாா். 3 போ் காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சோ்ந்தவா் சந்திரகாந்த் (20). இவரது நண்பா்கள் அதே மாநிலத்தைச் சோ்ந்த சிவக்குமாா்,சசிகுமாா், ரோஹித். இவா்கள் நான்கு பேரும், சென்னை அருகே செம்மஞ்சேரியில் உள்ள தனியாா் கல்லூரியில் பயில்கின்றனா். இதற்காக கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனா்.

இவா்கள் 4 பேரும் திங்கள்கிழமை இரவு கல்லூரி எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக ராஜீவ்காந்தி சாலையின் குறுக்கே நடந்து சென்றனா். அப்போது அங்கு அதிவேகமாக வந்த ஒரு லாரி, 4 போ் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சந்திரகாந்த் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 3 பேரை அப் பகுதி மக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

ADVERTISEMENT

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT