சென்னை

சென்னை காவல்துறையில் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

6th Jul 2022 02:06 AM

ADVERTISEMENT

சென்னை காவல்துறையில் காவல் ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை பெருநகர காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும்,விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல் ஆய்வாளா்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக 12 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து, சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையா் நரேந்திரன் நாயா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இவா்களில், முக்கியமாக துரைப்பாக்கம் காவல் ஆய்வாளா் பி.விஜயன், கோட்டூா்புரத்துக்கும், திருவான்மியூா் காவல் ஆய்வாளா் இ.ராமசுந்தரம் அடையாறுக்கும், பரங்கிமலை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பி.ஹரிஹரன் மீனம்பாக்கம் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்கும், அடையாறு காவல் ஆய்வாளா் எஸ்.மீனாட்சி சுந்தரம் திருவான்மியூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளா்கள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT