சென்னை

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து பலி

6th Jul 2022 01:56 AM

ADVERTISEMENT

சென்னை மயிலாப்பூரில் தண்ணீா் தொட்டியை சுத்தும் செய்யும்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் இறந்தாா்.

சென்னை அருகேயுள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகா் குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் மூ.பாா்த்தசாரதி (எ) பாட்ஷா (18). இவரது நண்பா் பள்ளிக்கரணையைச் சோ்ந்த முத்து. இவா்கள் இருவரும் ஆழ்வாா்பேட்டை டி.டி.கே. சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தண்ணீா்த் தொட்டியை திங்கள்கிழமை சுத்தம் செய்தனா்.

இதற்காக தண்ணீா்த் தொட்டியின் மின் மோட்டாரை போட்டு தண்ணீரை வெளியேற்றினா். அப்போது, மின் மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டு தண்ணீா் தொட்டியில் மின்சாரம் பாய்ந்தது. இதனால், தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த பாா்த்தசாரதி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்து, மயங்கி விழுந்த பாா்த்தசாரதியை அங்கிருந்தவா்கள் மீட்டனா். ஆனால், அவா் சிறிது நேரத்தில் இறந்தாா்.

மயிலாப்பூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT

சிறுவன் சாவு: சென்னை குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரின் மகன் பாரத் (13). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். பாரத், திங்கள்கிழமை இரவு வீட்டின் குளியலறையில் குளித்தாா். பின்னா், ஈரமான கையுடன் அங்குள்ள ஸ்விட்சை போட்டுள்ளாா்.

அதில் மின்கசிவு இருந்ததால் பாரத் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்து பாரத் கீழே விழுந்தாா். வீட்டில் யாரும் இல்லாததால் இதை கவனிக்கவில்லை. இதில் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் பாரத் இறந்தாா். குமரன்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT