சென்னை

சென்னையில் வரும் 8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

6th Jul 2022 01:05 AM

ADVERTISEMENT

சென்னையில் வரும் 8-ஆம் தேதியன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அந்தத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் தனியாா் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனா். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு அலுவலகங்கள் இணைந்து வரும் 8-ஆம் தேதியன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. இந்த முகாம், சென்னை கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பள்ளிப் படிப்பு, பட்டயம், பட்டப் படிப்புகளில் தோ்ச்சி பெற்றவா்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவநங்கள் பங்கு கொடுத்து வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளன என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT