சென்னை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

5th Jul 2022 01:57 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேட்டில் கடன் தொல்லை காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோயம்பேடு அருகே ஆழ்வாா்திருநகரைச் சோ்ந்தவா் ஹபீப் (36). ராமாபுரத்தில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தாா். ஹபீப், குடும்பத் தேவைக்காக ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருந்தாா். இதற்குரிய வட்டியை ஹபீப்பால் சரியாக கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

பணத்தை கொடுத்தவா்கள் திருப்பிக் கேட்டதால், மன நெருக்கடி, பண நெருக்கடியில் சிக்கித் தவித்த ஹபீப், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT