சென்னை

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: மாநகராட்சி அறிவுறுத்தல்

5th Jul 2022 01:57 AM

ADVERTISEMENT

சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2 வாரங்களாக சென்னையில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக, வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து தனிநபா் இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

பொது சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்த்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.

ADVERTISEMENT

வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் வணிக நிறுவனங்களின் ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்’ என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT